அரசியல் கேலிச்சித்திரக்காரர் ஸுனாரை மலேசியாவின் சிறந்த படைப்பாளி எனப் போற்றி பாராட்ட வேண்டுமே தவிர அவரின் கருத்துச்சொல்லும் உரிமையைக் கட்டுப்படுத்தக்கூடாது.
உலகக் கேலிச்சித்திர அமைப்பு ஒன்று, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனவரி 31-இல், நஜிப்புக்கு எழுதிய கடிதமொன்றில் Cartoonists Rights Network International (சிஆர்என்ஐ) எனும் அமைப்பு, ஸுனாரின் அலுவலகத்தைச் சோதனையிடுவது அவர்மீது வழக்குத் தொடுப்பது போன்றவற்றை விடுத்து உலகப்புகழ் பெற்ற அவரின் படைப்புகளைப் பாராட்ட வேண்டும் என்று வலியுறுத்தியது.
“மலேசியாவின் முக்கியமான மைந்தனைச் சட்டவிரோதமாக நடத்துவதற்கு சிஆர்என்ஐ கடும் கண்டனம் தெரிவிக்கிறது”, என அதன் நிர்வாக இயக்குனர் ரோபர்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார். .
மலேசிய அரசமைப்பு வழங்கும் கருத்துச் சொல்லும் உரிமை ஸுனாருக்குக் கிடைக்க பிரதமர் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
‘Lat’ போன்றவர் உண்மை கேலிச் சித்திர படைப்பாளிகள். ஜுனார் சும்மா ரோஸ் அக்காவைவே நோண்டி நுங்கு எடுத்துகிட்டு இருந்தா கூட இருக்கின்ற அவருடைய கணவர் என்ன ரோசம் கெட்டவரா?.
நஜிப்கும் ரோச்மஹ்வுக்கும் ஜூநாரை கொன்றால்தான் ஆற்றிரம் அடங்க்குமாமே