சீனர்களின் கடைகளை மலாய்க்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்திய விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி-இடம் போலீசார் இன்று வாக்குமூலம் பதிவு செய்வர்.
குற்றவியல் சட்டம் பகுதி 505-இன்கீழ் இஸ்மாயில்மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.
“இன்று மாலை அவரைச் சந்தித்து வாக்குமூலம் பதிவு செய்வோம்”, என்றாரவர்.