விலைகளைக் குறைக்க மறுக்கும் சீனர்களின் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முகநூல் பதிவுக்காக தாம் மன்னிப்பு கேட்க வேண்டிய “அவசியமில்லை” என்று விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் இன்று கூறினார்.
இதேபோன்ற நடவடிக்கையைப் பொருள்களின் விலைகளைக் குறைக்காத மலாய், இந்திய வர்த்தகர்களுக்கு எதிராகவும் எடுக்க வேண்டும் என இன்னொரு முகநூல் பதிவில் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தம் முகநூல் பதிவுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக அவர் சொன்னார்.
“சிலர் விலைகளைக் குறைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்”, என்றாரவர்.
விலை வாசியை இஷ்டம் போல ஏற்ற சொன்னது யார் இன்று இனவாத பேச்சு அம்னோ சாதனைகளில் இதோ
BN-னின் மற்றொரு எருமை இது.
நீ மன்னிக்க வேண்டாம் ராசா… முதல்ல விலையை குறைக்கட்டும் … எண்ணெய் விலை ஏறும்போது பொருட்களின் விலையும் ஏறுது… இறங்கும்போது மட்டும் எதுவுமே குறையமாட்டுது… என்னடா இது நியாயம் ???
மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை! “மணி” தான் எனக்குத் தேவை!