நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
நேற்றிரவு, திரெங்கானு, கெமாமானில் ஒரு செராமாவில் கல்ந்துகொண்ட பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இதை அறிவித்தார்.
அக்கூட்டம், குதப்புணர்ச்சி வழக்கில் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய ஐந்தாண்டுச் சிறைத்தண்டனைக்கு எதிராக அன்வார் செய்துள்ள மேல்முறையீட்டில் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக நடைபெறுகிறது.
அக்கூட்டம் மற்றவற்றோடு, கூட்டரசு நீதிமன்றம் தம்முடைய மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தால் அதன்பின்னர் பக்கத்தான் செல்ல வேண்டிய திசை பற்றியும் விவாதிக்கும் என்று அன்வார் தெரிவித்தாக பெர்னாமா கூறிற்று.
மூன்று கட்சிகளுக்கிடையிலும் தீர்க்கப்படாமலிருக்கும் பிரச்னைகள் பற்றியும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் விவாதிக்கும் என அன்வார் கூறினார்.
ஆனால் ஒரு தமிழனும் இருக்க மாட்டான்
ஒரு வேளை…அவர் போனால் பாஸ் பகாதான் தலைமை பொறுப்பை ஏற்க எதிர்க்கட்சி பொறுப்பு பாசுக்கு நடக்கும்…அஸ்மின் யோசிக்கலாம். வான். மீண்டும் பாராளமன்றம் வர பெர்மாதாங் பாவில் மீண்டும் பூ விக்கலாம்.