பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இருவரை போலீஸ் பாதுகாக்காது

copகல்லூரி  மாணவி  ஒருவரைப்  பாலியல்  வல்லுறவுக்கு  உட்படுத்தியதாகவும்  மிரட்டிப்  பணம்  பறித்ததாகவும்  குற்றம்  சாட்டப்பட்டுள்ள  இரு  போலீஸ்காரர்களை  போலீஸ்  பாதுகாக்க  முனையாது  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“அவர்களுக்கு  எதிராக  ஆதாரங்களைத்  திரட்டுவோம். திரட்டியதும்  வழக்கு  தொடுப்பது  பற்றிச்   சட்டத்துறை  தலைவரைக்  கலந்து  ஆலோசிப்போம்.

“விசாரணை  முடியும்வரை  அவர்களை  பணி இடைநீக்கம்  செய்ய  உத்தரவு  பிறப்பித்திருக்கிறேன்”, என்றாரவர்.