பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி, ஹுடுட் சட்டவரைவு தாக்கல் செய்யப்படுவரை அதன் உள்ளடக்கம் பற்றித் தகவல் தெரிவிப்பதில்லை என்ற பாஸின் முடிவு குறித்து கருத்துரைக்க மறுத்தார்.
அச்சட்டவரைவு குறித்து ஞாயிற்றுக்கிழமை பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றத்தில் பாஸ் விளக்கமளிப்பதற்காக அவர் காத்திருக்கிறார்.
“இப்போதைக்கு அது பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. கருத்துரைக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை அவர்களின் விளக்கத்தைக் கேட்போம்”, என்று அஸ்மின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.