இஸ்மாயில்: புறக்கணிப்புச் செய்தியைத் திரித்துக் கூறிவிட்டார்கள்

sabriபொருள்களின்  விலை  உயர்வு  தொடர்பில்  சீனர்களின்  கடைகளைப்  புறக்கணிக்க  வேண்டும்  என்று  கூறிச்  சர்ச்சையை  உண்டுபண்ணிய  விவசாயம்,  விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில் சப்ரி யாக்கூப்  இன்னமும்  தாம்  அப்படிச்  சொல்லவில்லை  என்றுதான்  சாதிக்கிறார். அவர்  சொன்னதைத்  திரித்துக்  கூறிவிட்டார்களாம்.

நேற்று  ஒரு  கருத்தரங்கில்  பேசிய  இஸ்மாயில்,  தாம்  சொன்னதை  ஒரு  இன  விவகாரமாக்கி  நீட்டித்துக்  கொண்டு  போக  வேண்டாம்  என்று கேட்டுக்கொண்டார்.

“பயனீட்டாளர்களின்  நலன்  கருதி  (அச்செய்தியின்)  நோக்கத்தை  மட்டுமே  கவனிப்போம். நம் ஒருமித்த  சக்தியைக்
கொண்டு  வர்த்தகர்கள்  விலைகளைக்  குறைக்கும்படியும்  அதன்  பயன்கள்  எல்லா  இனங்களுக்கும்  கிடைக்கும்படியும்  செய்வோம்.

“நான்  சொன்னது  திரித்துக்  கூறப்பட்டிருக்கிறது.. என்  கூற்று  எளிமையானது. அது  சொல்லும்  செய்தியும்  தெளிவானது: விலைகளைக்  குறைக்கும்  சக்தி  பயனீட்டாளர்களிடம்  உண்டு. அவ்வளவுதான்”, என்றாரவர்.