நெகிரியின்‘மணமுறிவுக்குப் பின்னரே மதமாற்றம்’ திட்டத்துக்கு அபிம் எதிர்ப்பு

abimமுஸ்லிமாக  மாதம்  மாற  விரும்பும்  ஒருவர்  முதலில் முஸ்லிம்-அல்லாத  வாழ்க்கைத்  துணையை  விவாக ரத்து  செய்வதைச்  சட்டவிதியாக்கும்  நெகிரி  செம்பிலான் திட்டத்துக்கு  அங்காத்தான்  பீலீயா  இஸ்லாம்  மலேசியா  எதிர்ப்புத்  தெரிவிக்கிறது.

“அபிம்  அப்பரிந்துரையை  எதிர்க்கிறது. அதற்குப்  பதிலாக,  முஸ்லிம்-அல்லாத  தம்பதிகளின் வழக்கு  விசாரணைக்கு ஷியாரியா  நீதிமன்றங்கள்  கதவுகளைத்  திறக்க  வேண்டும் என்பதைத்  திரும்பவும்  வலியுறுத்துகிறது.

“இரு  தரப்பினரும்  முஸ்லிம்களாக இருக்க  வேண்டும்  என்று கூறும்  மாநில  சட்டவிதியைத்  திருத்த  வேண்டும்”, என  அபிம்  தலைமைச்  செயலாளர்  முகம்மட்  பைசல்  அப்துல்  அசீஸ்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

சிவில்  நீதிமன்றங்களில்  மணமுறிவு  பெற  நீண்ட   காலமாகும்  என்பதால்  “அது  ஒருவர் உடனடியாக  இஸ்லாத்தைத்  தழுவுவதற்குத்  தடையாக  இருக்கும்”  என்றாரவர்.