ஜோகூர் மாநில வெட்டுமரத் தொழில் பற்றிக் கேள்வி கேட்டால் மந்திரி புசார் முகம்மட் காலிட் நோர்டினும் மாநில அரசும் பதிலளிக்காமல் வாயை மூடிக் கொள்வதாக டிஏபி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
“வெட்டுமரத் தொழில் பற்றிய எந்த விவரத்தை மூடிமறைக்க அவர்கள் முயல்கிறார்கள்?”, என பெந்தாயான் சட்டமன்ற உறுப்பினர் சுவா வீ பெங் தெரிவித்தார்.
மரங்களை வெட்டும் நடவடிக்கைகள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விவகாரம் என்று குறிப்பிட்ட சுவா, மாநில அரசு பொதுமக்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள எப்போதும் தயராக இருக்க வேண்டும் என்றார்.
அப்போதுதான் மக்கள் மாநில அரசின் கண்ணும் காதுமாகச் செயல்பட்டு சட்டவிரோதமாக மரங்களை வெட்டும் நடவடிக்கைகளைத் தடுக்க முடியும்.
“வெட்டுமர நடவடிக்கைகளை முறையாகக் கையாளாவிட்டால் கேமரன் ,மலையிலும் மற்ற இடங்களிலும் நிகழ்ந்ததுபோல் தாவர வகைகளும் விலங்கினங்களும் அழிந்துபோகலாம்”, என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கேமரனில் விவசாயிகள் அனைவரும் சீனர்களும் இந்தியர்களும் மட்டுமே.