மஇகா இளைஞர்கள்: அஸ்மின் முற்போக்குவாதியாக தெரியவில்லை

1-sivaragமுஸ்லிமாக   மதம்  மாற  நினைப்போருக்கு “முதலில்  மணமுறிவு, பிறகுதான்  மதமாற்றம்” என்ற  நிபந்தனையை  விதிக்க   நெகிரி  செம்பிலான்  உத்தேசித்திருப்பதுபோல்  எதிரணியினரால்  வழிநடத்தப்படும்  சிலாங்கூர்  அரசு உத்தேசிக்கவில்லை  என்பது மஇகா   இளைஞர்  பகுதிக்கு “அதிர்ச்சி” அளிக்கிறது.

நெகிரி  செம்பிலான்  மந்திரி  புசார்  முகம்மட்  ஹசான்   அவ்வாறு  முன்மொழிந்தது  ஒரு  பொன்னான  வாய்ப்பு.  அதைப்  பயன்படுத்திக்கொள்ள  சிலாங்கூர்  தவறிவிட்டது  என மஇகா இளைஞர்  தலைவர்  சி.செல்வராஜா  கூறினார்.

“முற்போக்கான,  தாராளப்போக்குக்  கொண்ட  கூட்டணி  என்று  தம்பட்டம்  அடித்துக்கொள்ளும்  பக்கத்தான்  ரக்யாட்,  முதல்  ஆளாக  இந்தப்  புதிய  விதிமுறையை  வரவேற்று  ஆதரவு  தெரிவித்து  எவ்வித  தயக்கமுமின்றி  அதைச்  செயல்படுத்தியிருக்க  வேண்டும்”, என்றாரவர்.

ஆனால்,  சிலாங்கூர் மந்திரி  புசார்  அஸ்மின்  அலி .
அதைச்  செயல்படுத்துவது  எளிதல்ல  என்றும்  செயல்படுத்துமுன்னர்  கல்விமான்கள், சமய  அறிஞர்கள்  உள்பட  பல  தரப்புகளுடனும்  விவாதிக்க  வேண்டியிருக்கும்  என்றும்  அவர்  கூறியுள்ளார்.

“சிலாங்கூர்  அரசிடம்  அப்படிப்பட்ட திட்டம்  எதுவுமில்லை”, என்றவர்  தெரிவித்தார்.

அஸ்மினின்  பிற்போக்கான கருத்துகள்  ஆச்சரியமும்  அதிர்ச்சியும்  அளிப்பதாக  சிவராஜா  வருணித்தார்.