மறுதேர்தல் நடத்த வேண்டுமென்ற உத்தரவால் அதிருப்தி அடைந்துள்ள மஇகா உறுப்பினர்கள் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யை நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டாம் என உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“ஆர்ஓஎஸ் கலந்துரையாடுவதற்கு எப்போதுமே வாயிலைத் திறந்து வைத்துள்ளது. எந்த விவகாரத்தையும் அவர்களுடன் பேசித் தீர்வு காணலாம்”,என ஜாஹிட் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மஇகா உள்பூசலில் ஆர்ஓஎஸ் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அட எருமை !!!
இதற்காக MIC நீதிமன்றம் போனது அந்த காலம் ;
MIC-யின் இந்த காலம் “தண்ணீ அடிச்சிட்டு” உண்ணாவிரதம் இருப்பது, அதற்காகவே இருக்கிறார்கள் பழனிவேலின் அரிய கண்டுபிடிப்பான ” அடங்காபிடாரி குமார்” | “சகுனி சாமீ” போன்றோர்கள்.
ஆர்.ஒ.எஸ். – ஐ நீதிமன்றத்திற்கு இழுத்தால் பழைய அம்நோவுக்குக் கிடைத்த வெகுமதியே கிடைக்கும் என்று சொல்லாமல் சொல்லுகின்றாரோ இந்த அமைச்சர்?.
MIC க்கு தலைவராய் நீங்கள் இருக்கும் பொழுது எங்களுக்கு என்ன கவலை என அங்கத்தினர்கள் கொட்டாவி விடுகிறார்கள்.