மகாதிர்: கிட் சியாங்கோ, டிஏபியோ கம்முனிஸ்டுகள் அல்ல

commலிம்  கிட்  சியாங்கும்  டாக்டர்  மகாதிர் முகம்மட்டும்  அரசியலில்  என்றும்  எலியும்  பூனையுமாக  இருப்பவர்கள்.

வாய்ப்புக்  கிடைக்கும்போதெல்லாம்  ஒருவரை  மற்றவர்  குறைசொல்லத் தயங்கவே  மாட்டார்கள். முன்னாள்  பிரதமரைப்  பொருத்தவரை   அவர்,  டிஏபி  பெருந்  தலைவரை  என்ன  வேண்டுமானாலும்  சொல்வார்.  அவரை  ஒரு  கம்முனிஸ்டு  என்று  மட்டும்  சொல்ல  மாட்டார்.

ஆனால், லிம்மை  ஒரு “சர்வாதிகாரி”  என்கிறார் மகாதிர். இதில்  வேடிக்கை  என்னவென்றால்  மகாதிரை  வருணிக்க  லிம்மும் அடிக்கடி இதே  வார்த்தையைத்தான்  பயன்படுத்துவார்.

“லிம்மை  ஒரு  கம்முனிஸ்டாக  நான்  பார்க்கவில்லை. அவர்  ஒரு  சர்வாதிகாரிபோல. தமக்குப்  பின்  தம்  மகன்(குவான்  எங்)  வரவேண்டும்  என்று  விரும்புகிறார்போல்  தெரிகிறது.

“நாட்டைவிட  குடும்பத்துக்கு   முக்கியத்துவம்  கொடுப்பதுதான்  எனக்குப்  பிடிக்கவில்லை”, என  மகாதிர்  கூறினார். இதே  குற்றச்சாட்டு  மகாதிர்மீதும்  சுமத்தப்படுவதுண்டு.

மலேசியா- கியூபா உறவுகளின்  40ஆம் ஆண்டு  நிறைவுவிழாவில்  செய்தியாளர்களின்  கேள்விகளுக்கு  மகாதிர்  பதில்  அளித்தார்.