ஆளும் கூட்டணியும் எதிரணியினரும், என்ஜிஓ-களும் அமைதி உடன்பாடு காண வேண்டும் என்று நெகரா கூ புரவலர் அம்பிகா ஸ்ரீநிவாசன் முன்வைத்த ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கிறது ஆனால், அது செயல்வடிவம் பெறும் சாத்தியம் இருப்பதுபோலத் தெரியவில்லை.
ஆளும் கட்சியிடமும் எதிரணியிடமும் ஒருவர் மற்றொருவருடன் ஒத்துழைக்கும் அரசியல் விருப்பமும் இல்லை, ஆர்வமும் இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அந்தந்தக் கூட்டணிகளுக்குள்ளேயே செயலாற்றுவதில் அரசியல் விருப்பம் இருப்பதில்லை என ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழகத்(Ideas) தலைமை செயல் அதிகாரி வான் சைபுல் வான் ஜான் கூறினார்.
“பக்கத்தான் ரக்யாட்டில், ஒற்றுமையின்றி தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள், பிஎன்னில் சீன வர்த்தகர்களைச் சாடிய அமைச்சரைக் கண்டிக்கக்கூட அரசியல் விருப்பம் இல்லை”, என மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.
சமாதானம் வந்து விட்டால் அரசியல் நடத்த முடியாது என்று இவர் மறைமுகமாக சொல்கின்றாரோ என்று எனக்கு டவுட் வருது.