பொருள்விலையைக் குறைக்காத சீனர்களின் கடைகளை மலாய்க்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்ட விவசாயம், விவசாயம் சார்ந்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இன்று பிற்பகல் மணி 3.30க்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அமைச்சரின் கூற்று “அச்சத்தை, கலவரத்தை”த் தூண்டிவிடக்கூடியது “பொது அமைதியைக் குலைக்க”க் கூடியது என்பதால் குற்றவியல் சட்டத்தின் 505பி பிரிவின்கீழ் அவர்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மக்களிடம் கலவரத்தை தூண்டிவிடக்கூடியதும் பொது அமைதியை குலைக்கூடிய கருத்துணை வெளியிட்ட அமைச்சர் மீது தேச நிந்தனை சட்டம் பாயாதோ??? ஒவ்..ஆமாம், தேச நிந்தனை என்பது குறிப்பிட்டோருக்கு மட்டும் தானோ????சரி, எப்போது தேசிய சட்ட அலுவலகத்துக்கு உங்கள் விசாரணையை அனுப்பப் போகிறீர்
எ ஜியின் ஆலோசனைக்காக ??? … கோய்ந்தா!!! கோய்ந்தா!!!
அவர் மக்களின் நல்லதுக்குத்தான் அவ்வாறு சொன்னார். ஆதலால், தேசிய நிந்தனை சட்டம் பாயாது. அதற்குப் பதில் உப்பு சப்பு இல்லாத சட்டத்தின் கீழ் விசாரிப்பது என்பது கேலிக் கூத்து. அவர்கள் நடிக்கும் நாடகத்திற்கு நாம் பார்வையாளர்கள். இந்த நாடகத்திற்கு ஒரு சினிமா விமர்சனம் போட்டால் என்ன?.