4அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு2: அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பு

 

Anwarsodomy2குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் அன்வாருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் இன்று பெடரல் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

இன்று காலை மணி 8.00 க்கு முன்பாகவே புத்ராஜெயா உச்சநீதிமன்றத்தின் முன் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. அனைத்துலக கண்காணிப்பாளர்களும் வந்துள்ளனர். வழக்குரைஞர்கள் அவர்களுடைய வழக்கு கோப்புகளைக் காட்டினால் மட்டுமே நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பிகேஆரின் நிக் நஸ்மி நிக் அஹமட் தலைமையில் சுமார் 200 பேர் கூடி சிறிது தூரம் அணியாகச் சென்றனர்.

செய்தியாளர்கள் நீதிமன்ற அறையின் இடப்பக்கத்தில் அமர்ந்துள்ளனர். நீதிமன்ற பொதுமக்கள் அமரும் இடத்தில் ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் மற்றும் பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் சுல்கிப்லி அஹமட் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.

அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் வந்து சேரவில்லை.

 

பெடரல் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் அன்வார் மேல்முறையீடு வழக்கின் தலைமை வழக்குரைஞருமான கோபால் ஸ்ரீராம் நீதிமன்றத்தில் இருக்கிறார்.
அவருடன் எதிர்தரப்பு வழக்குரைஞர்களாக சங்கீத் கவுர் மற்றும் பால் எரிக்சன் ஆகியோர் இருக்கின்றனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பு ஆசியப் பகுதியின் துணை நிர்வாகி பில் ரோபர்ட்சன் நீதிமன்றத்தில் இருக்கிறார்.

 

அன்வார் நீதிமன்றத்தில்

 

சரியாக மணி 9.02 க்கு அன்வார் நீதிமன்றம் வந்தடைந்தார். அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொள்கின்றனர்.  அன்வாருடன் அவரது துணைவிAnwarsodomy22 வான் அஸிசா மற்றும் டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பினாங்கு முதல்வர் குவான் எங் ஆகியோரும் இருக்கின்றனர்.

தாம் நன்றாக தூங்கியதாக கூறிய அன்வர், தீர்ப்பு தமக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

ஆயிரத்திற்கு மேற்பட்ட அன்வார் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியுள்ளனர்.

 

காலை மணி 10.08: ஐவர் அடங்கிய அமர்வுக்கு தலைமை ஏற்றிருக்கும் தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா இதர நீதிபதிகளுடன் அவர்களது இருக்கையில் அமர்கின்றனர்.

அன்வார் இப்ராகிம் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.

தலைமை நீதிபதி அரிப்பின் தீர்ப்பை வாசிக்கத் தொடங்குகிறார். வழக்கின் பின்னணியை விவரிக்கிறார்.

 

அன்வார் குற்றவாளி

 

 

நண்பகல் மனி 12.05: அன்வார் மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பை இரண்டு மணி நேரங்களுக்கு வாசித்த பெடரல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அரிப்பின் குற்றம் சாட்டப்பட்டுள்ள அன்வாருக்கு எதிராக வலுவான அறிவியல்பூர்வமான சாட்சியங்கள் இருக்கின்றன. ஆகவே, அன்வார் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினார்.

அன்வார் சிறையில் அடைக்கப்படுவார்.

 

தலைமை நீதிபதியின் தீர்ப்பை கேட்ட பின்னர் அங்கிருந்த அன்வார் ஆதரவாளர்கள் சிலர் வெளிப்படையாக கண்ணீர் சிந்தினர்.

“நான் மிக ஏமாற்றமடைந்துள்ளேன்” என்று பெர்சே இயக்கத்தின் தலைவரான மரியா சின் அப்துல்லா கூறினார்.

பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஹத்தாவும் கண்ணீர் சிந்தினார்.

ஆனால், அன்வார் எதையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. முகமட் சாபு, மாபுஸ் ஒமார் மற்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகிய பக்கத்தான் தலைவர்களை கட்டித்தழுவினார்.