சீனா, இந்தியா, ஆப்ரிக்கா ஆகியவற்றில் தேவை பெருகி வருவதால் எண்ணெய் விலை யுஎஸ்$65க்கும் யுஎஸ்$70-க்குமிடையே உயர்வு காணும் வாய்ப்பு இருக்கிறது.
ஜூன் மாதத்தில் உலகப் பொருளாதாரம் உயரத் தொடங்கும்போது இப்போது வீழ்ச்சி கண்டுவரும் கச்சா எண்ணெய் விலையும் உயர்வு காணும் என முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின் கூறினார்.
“ஆனால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு யுஎஸ்$100 ஆக உயரும் வாய்ப்பு இவ்வாண்டில் இல்லை. இன்றைய உலகப் பொருளாதார நிலவரத்தில் யுஎஸ்$65- யுஎஸ்$70 என்பதே நல்ல விலைதான்”, என்றாரவர்.
– Bernama