அன்வாருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

polisஎதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  முறையீட்டு  நீதிமன்றம்  ஏற்கனவே  விதித்திருந்த  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனை  நிலைநிறுத்தப்படுவதாக   நீதிபதி  அரிப்பின்  கூட்டரசு நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அன்வார்  தம்மை  காஜாங்  சிறைக்கு  அல்லாமல்  சுங்கை  பூலோ  சிறைக்கு  அனுப்ப  வேண்டுமெனக்  கேட்டுக்கொண்டதாகவும்  அவரது  கோரிக்கையை  நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டதாகவும்  அவரின்  வழக்குரைஞர்  கோபிந்த்  சிங்  தெரிவித்தார்.

தீர்ப்பளித்துவிட்டு  அரிப்பினும்  மற்ற  நீதிபதிகளும்  நீதிமன்றத்தைவிட்டு  வெளியேறியபோது  அன்வாரின்  ஆதரவாளர்கள் ‘ரீபோர்மாசி’, ‘அல்லாஹுஅக்பர்’ முழக்கங்களை  எழுப்பினர்.

நீதிமன்றத்துக்கு  வெளியில்  கலகத் தடுப்புப்  போலீசாரும்  வேககதியில்  செயல்படத்  தொடங்கினார்கள். அவர்களுக்கான  மணி  அடிக்கப்பட்டதும்  அவரவர்    அவர்களுக்குரிய  இடங்களை நோக்கி  நகர்ந்தார்கள்.

நீதிமன்றத்துக்குமுன்  கூடி  நின்ற  அன்வார் ஆதரவாளர்கள்  தீர்ப்பைக்  கண்டித்தும்  அன்வாரை  ஆதரித்தும்  விடாமல்  முழங்கிக் கொண்டிருந்தார்கள். இதனால்,  நீதி  மாளிகைக்கு வெளியில்  பதற்ற  நிலை  நிலவியது.

அவர்களைக்  கலைந்து  செல்லுமாறு  கலகத் தடுப்புப்  போலீசார்  இரண்டு  முறை  எச்சரித்து  விட்டனர். ஆனால், கூட்டம்  கலைவதாக  தெரியவில்லை.