எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது உலக நாளேடுகளிலும் செய்தித் தளங்களிலும் முக்கிய செய்தியாக இடம்பெற்றது.
டிவிட்டரில் அதிகம் தேடப்படும் 10 தலைப்புகளில் அன்வார் என்பதும் ஒன்றாக இருந்தது.
பிரிட்டனின் பிபிசி, அல்-ஜசீரா, புளும்பெர்க் செய்தி நிறுவனம், சிங்கப்பூரின் சேனல் நியுஸ் ஏசியா ஆகியவற்றில் அன்வாருக்குத் தண்டனை என்பதே தலைப்புச் செய்தி.
மத்திய கிழக்கில், ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘த நேசனல்’ செய்தித்தாளிலும் பிரிட்டனின் தலையாய செய்தித்தாளான கார்டியனிலும் இரண்டாவது பிரதான செய்தி இதுதான்.
ஆஸ்திரேலியாவின் ஏபிசி, சிட்னி மார்னிங் ஹெரால்ட், ஜெர்மனியின் டச்சு வெல், வால்ஸ்திரிட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட் முதலியவையும் அன்வாரின் செய்திக்கு முக்கிய இடம் கொடுத்திருந்தன.