கூண்டில் இருந்தவாறு நீதிபதிகளைச் சரமாரியாக தாக்கினார் அன்வார்

dockஐந்தாண்டுச் சிறைத்தண்டனையைக்  கூட்ட  வேண்டுமென்ற  அரசுத்தரப்பின்   முறையீட்டின்மீது   வாதம்  நடந்தபோது  அன்வார்  இப்ராகிம்  ஐவரடங்கிய  நீதிபதிகள் குழுவைக்   காரசாரமாக தாக்கினார்.

தலைமை  நீதிபதி  நிறுத்தச்  சொல்லியும்  அவர்  நிறுத்தாததால்  நீதிபதிகள்  நீதிமன்றத்திலிருந்து வெளியேறினர்.

நீதிமன்றத்தில் பேச  அனுமதிக்கப்பட்டதும்  எதிரணித்  தலைவர்,   அரசியல்  சதித்திட்டம்  தீட்டிய தம்  அரசியல்  எதிரிகளுடன்  நீதிபதிகள் கூட்டுச்  சேர்ந்து  கொண்டதாகக்  குற்றம்  சுமத்தினார்.

“உங்கள்  அரசியல்  எஜமானர்களின்  சொல்லுக்கு  அடிபணிந்து  நீதியின்  படுகொலையில்  பங்காளி  ஆனீர்கள். இருண்மைப்  பக்கத்துடன்  இணைந்திருப்பதென  முடிவு  செய்தீர்கள்”, என்றவர்  சாடினார்.

நீதிபதிகள்  அவ்விடத்தைவிட்டு  அகன்ற  பின்னரும்  அன்வார்  நிறுத்தாமல்  பெருங்குரலில்  பேசிக்  கொண்டுதான்  இருந்தார். சுதந்திரத்துக்கும்  நீதிக்கும்  தொடர்ந்து  போராடப்  போவதாக  முழக்கமிட்டார்.

“நான்  சரணடைய  மாட்டேன்”, என்றவர்  சூளுரைத்தார்.