அன்வார் இப்ராகிம் தண்டிக்கப்பட்டது அவரின் பணியாளர்களையும் பாதித்துள்ளது.
அவரின் காரோட்டுனராக பணியாற்றிய அப்துல்லா சானி,55, “32 ஆண்டுகளாக அவரிடம் பணியாற்றி இருக்கிறேன்”, என்றார்.
“இருவரும் ஒரே அறையில் படுத்துறங்கியது உண்டு. எதுவும் நடந்ததில்லை.
“அத்துடன் நான் சைபூலைவிடவும் அழகானவன்”, என்றார் அப்துல்லா.
மேலும், அன்வார்மீது குதப்புணர்ச்சி குற்றஞ்சாட்டிய முகம்மட் சைபூல் புகாரி அஸ்லான் அன்வாரின் உதவியாளராக என்றும் இருந்ததில்லை எனவும் அவர் சொன்னார்.
“அவர் அன்வாரின் முன்னாள் உதவியாளர் ரஹிமி ஒஸ்மானின் நண்பர். ரஹிமி எங்கு சென்றாலும் கூடவே செல்வார். அன்வாரிடம் நெருக்கமாக இருப்பதுபோல் காண்பித்துக்கொள்வார்”, என அப்துல்லா கூறினார்.