கருத்துச் சொல்லும் உரிமையைக் கட்டுப்படுத்த முனைவது கூடுதல் அமைதியின்மைக்கு இட்டுச் செல்லும் என ஊடகக் கண்காணிப்பு அமைப்பான சுயேச்சை இதழியல் மையம் (சிஐஜே) எச்சரித்துள்ளது.
தேச நிந்தனைச் சட்டத்தையும் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் மற்ற சட்டங்களையும் மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் எச்சரித்திருப்பதை அடுத்து சிஐஜே இயக்குனர்கள் சோனியா ரந்தாவும் ஜாக் கீயும் இவ்வாறு தெரிவித்தனர்.
கூட்டரசு நீதிமன்றம் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையை நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து “கொடுமைக்கார ஆட்சிக்கு” எதிர்ப்புத் தெரிவிக்குமாறு டிவிட்டரில் மக்களைக் கேட்டுக்கொண்ட டிஏபி எம்பி ங்கா கொர் மிங்-மீது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் என காலிட் கூறியிருந்தார்.
கேலிச்சித்திரக்காரர் ஸுனாரும் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லியும்கூட விசாரணை செய்யப்படுவார்கள் என காலிட் கூறினார்.
தேச நிந்தனை என்றால் என்ன என்று தெரியாத அறிவாளிகள் எல்லாம் இருகிறார்கள்.