அன்வார் மீதான குதப்புணர்ச்சி வழக்கு 2 இன் தீர்ப்பு அரசியல் பழி தீர்ப்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் உதவித் தலைவர், பெப்ரவரி 11, 2015.

 

Anwar5years மலேசிய எதிர்க்கட்சி தலைவர்   அன்வார் இப்ராகிம் மீது சுமத்தப்பட்ட  குதப்புணர்ச்சி வழக்கில்  அவருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, நீதித்துறையின் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்திவிட்டது. இவ்வழக்கு நாட்டுக்குப் பெரும் அவமானமாக அமைந்து விட்டது.

 

அரசியல் சார்ந்த விவகாரங்களின் மீது இந்நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருந்துள்ளது என்பதை அறிந்த மக்களுக்கும், உலக நீதி பரிபாலனச்சபை பார்வையாளர்களுக்கும் இத்தீர்ப்பு பெரிய ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஆனால் சுதந்திர மலேசியாவின் நவீன யுகத்தில் உன்னத நாட்டை நிர்மாணிக்கப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் இந்நாட்டுத் தலைவர்களின் வாக்குறுதிகளை  நம்பிய மக்களுக்கு அவை பெரும் இடியாக அமைந்துவிட்டது. இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு. ஏமாற்றத்தை வழங்கிவிட்டது.

 

 

இந்த வழக்கில் சாட்சியங்கள் மற்றும் குற்றவியல் கூறுகள் மீது எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் எழுப்பிய பல கேள்விகளும், சந்தேகங்களும் ஒதுக்கித் தள்ளப்பட்டோ, அவைகளுக்கு முறையான விடையோ, விளக்கமோ இன்றி தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளதால், நாட்டு நீதித்துறை மீதான மக்களின் அவநம்பிக்கை மேலும் வலுவடைந்து விட்டது. இந்தத் தீர்ப்பு நாட்டை மற்றவர்களின் பெரும் நகைப்பிற்கு ஆட்படுத்திவிட்டது.

 

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை தொடர்பாக யூ.இ.எம்முக்கு எதிராக லிம் கிட் சியாங் தொடுத்த வழக்கில் தான் எழுதிய தீர்ப்புக்கு எதிராகப் பிற்காலத்தில் சாலே அபாஸே வேதனையுடன் கருத்துரைத்திருந்தது மக்கள் அறிந்ததே!

 

அதன்பின் அடுக்கடுக்கான பல தீர்ப்புகளும், நடவடிக்கைகளும் மலேசிய நீதிமன்றங்களின் மாண்பை குழிதோண்டி புதைப்பதாக அமைந்துள்ளன. மலேசிய அரசியல் சாசனத்தை ஊதாசீனப்படுத்தும் விதமாகத் மகாதீரால் ஏற்படுத்தப்பட்ட  உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணை ஆணையமும், நீதிபதிகள் நீக்கமும். அமைந்தது.

 

அதைப் போல், அன்வார் இப்ராகிம் மீதான முதல் குதப்புணர்ச்சி வழக்கு, யூசோப் சின்- லிங்கம் விவகாரம், மங்கோலிய பெண் அல்தான்தூயா 1altanகொலை வழக்கு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

 

நாடு முழுவதிலும் பக்காத்தான்  தலைவர்களின் சுமூகப் பிரவேசங்களைத் தடுக்கவும், பாரிசான்  அரசாங்கம் நீண்ட நாட்களாகப் போலீஸ், எம்.எ.சி.சி , இமிகிரேசன், சட்டத்துறைகளைப் பயன்படுத்தி வருவதில்  இந்த வழக்கு தீர்ப்பு மேலும் ஓர்  அத்தியாயமாக அமைந்துள்ளது.

 

இதனால் எதிர்க்கட்சித் தலைவரின் மீது மக்களுக்கு அனுதாபமும், அபிமானமும் உயரவே செய்துள்ளது.

 

xavier-jayakumar-pkrஇக்கட்டான காலக்கட்டத்திலிருந்து  நாடு விடுபட, இந்நாடு மீண்டும் முன்னேற்றப் பாதையில் பீடு நடைபோட, மக்கள் தீர்க்கமான முடிவினை விரைந்து எடுக்க வேண்டும்.

 

இந்நாட்டை ஆரோக்கியமற்ற  தலைமைத்துவத்திடமிருந்து மீட்கத் தவறினால் நாடு சீரழிவதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.

 

மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு  இந்நாட்டைக் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான நேரம் இது என்பதை  உணர்ந்து, நாட்டுக்காக மக்கள் ஒற்றுமையாகத் தியாகம் செய்ய முன்வர வேண்டும்.