அன்வார் இப்ராகிம் அம்னோவில் இருந்தபோது அவரும் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்கலாம்.
அதற்காக அவர் சிறையில் தனிச் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என உள்துறை அமைச்சர் ஜாஹிட் கூறினார்.
“சிறைச்சாலை எல்லாக் கைதிகளையும் சட்டப்படி எப்படி நடத்த வேண்டுமோ அப்படியே நடத்தும்”,என புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலை துறை தலைமை இயக்குனர் சுல்கிப்ளி ஒமார், போலீஸ் படை துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் ஆகியோரும் அப்போது உடன் இருந்தனர்.
சுங்கை புலோ புதிய சிறைச்சாலையில் VIP வசதிகள் இருக்காம் அதுகள் இதுகளுக்கு மட்டும் ! எதுகளுக்கு என்று என்னை கேக்காதீர்கள் .எதற்கும் ஒரு காலம் வரும் பொறுத்திரு மகனே !!
இவன் எப்ப உள்ளேப் போகப் போறானோ தெரியவில்லை.
எந்த வசதியும் செய்து தர வேண்டாம்…..கோவிலில் மணி அடிக்க தடை விதித்த பாவிக்கு ஒரு ஆண் துணை ஏற்பாடு செய்யுங்கள்….தனிமையின் கொடுமை உங்களிக்கு தெரியாதா அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் ….
இவனை என்ன சொல்வது என்றே தெரியவில்லை …..
அப்படிதான் அப்துல்லா அங் (‘Abdullah Ang’) கதையிலும் சொன்னார்கள். அவர் சிரம்பான் வரை சென்று பூந்தோட்டம் பயிரிட்டு விட்டு வரவில்லையா!. ரஹீம் உள்ளுக்குத்தான் இருந்தார் என்று நாங்கள் என்ன பார்த்தோமா?. மலேசியா போலே நாட்டில் எது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்!.