இஸ்மாயில் சப்ரியுடன் சேர்ந்து கூட்டறிக்கையா? லியோ மறுப்பு

liowஅமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி, சீன  வர்த்தகர்களைக்  குறைகூறியது  பற்றி  விளக்கமளிக்கும்  அறிக்கை  ஒன்றை  வெளியிட்டு  அது, மசீச  தலைவருடன்  சேர்ந்து  வெளியிடப்படும்  கூட்டறிக்கை  என்றும்  கூறியிருந்ததை லியோ  தியோங்  லாய்  உடனடியாக  மறுத்தார்.

முகநூலில்  அவ்வறிக்கை  பதிவான  30வது  நிமிடத்தில்  லியோவின் மறுப்பு  டிவிட்டரில்  வெளியானது. .

“இஸ்மாயில்  சப்ரியுடன்  சேர்ந்து  நான்  அறிக்கை  எதனையும் வெளியிடவில்லை. எனக்குத்  தெரியாமல்  எப்படி  ஒரு  கூட்டறிக்கை வெளியிடலாம்?”, என்றவர்  வினவினார்.

பிற்பகல்  மணி  2.45க்கு  இஸ்மாயில்  சப்ரி  முகநூலில்  அக்கூட்டறிக்கையைப்  பதிவிட்டதாகக்  கூறப்படுகிறது. சர்ச்சையை  உண்டுபண்ணீய  விவகாரம்  பற்றி  பிஎன்  உணர்வில்  லியோவுடன் கலந்துபேசிய  பின்  அவ்வறிக்கை  வெளியிடப்படுவதாக  அதில்  கூறப்பட்டிருந்தது.

ஆனால் 3.45க்கு இஸ்மாயில்  சப்ரியின்  முகநூல்  பக்கத்தில்  அது  இல்லை.