தேவையற்ற இழப்புகளையும் சேதாரத்தையும் குற்றமாக்க வேண்டும்

maccஅரசாங்கச்  சேவையில் ஊழலை  ஒழிக்க  அரசாங்க  அதிகாரிகளிடையே  நிகழும் ஒழுக்கக்கேடுகளைக்  குற்றச்செயல்களாக்க  வேண்டும் என்கிறது  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி).

அப்படிச்  செய்வது  தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கை சுட்டிக்காட்டுவது  போல், அரசாங்கச்  செலவுகளில்  ஏற்படும்  தேவையற்ற  இழப்புகளையும்  சேதாரத்தையும் தடுக்கும்  என எம்ஏசிசி-இன்  நடவடிக்கை  மீளாய்வு  வாரிய(ஓபிஆர்)  தலைவர்  ஹடினான்  அப்துல்  ஜலில்  தெரிவித்தார்.

“அது  சுட்டிக்காட்டும் விவகாரங்களில்  பெரும்பாலானவை  ஊழல்  என்று  சொல்ல  முடியாவை. அவை  நிர்வாக  முறைகளிலும்  நடைமுறைகளிலும்  உள்ள  பலவீனங்கள். அவை  ஊழல்  நிகழ்வதற்கு  இடமளித்து  விடுகின்றன”, என  ஹடினான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

2009 எம்ஏசிசி  சட்டத்தில்  இதற்கான  திருத்தங்களைச்  செய்ய  வேண்டும்  என  ஓஆர்பி  வலியுறுத்தியது.