பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசாருமான நிக் அசிஸ் நிக் மாட் முதுமையின் காரணமாக நேற்று காலமானார்.
அவர் கிளந்தான் மாநில மந்திரி புசாராக 23 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள மசூதியில் அவரது ஈமச் சடங்கு காலை மணி 10.00 க்கு நடத்தப்படும்.
பிரதமர் நஜிப் ரசாக், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரும் பினாங்கிலிருந்து இன்று காலையில் அங்கு சென்றடைந்தனர்.
கிளந்தான் மாநிலம் ஒரு மாபெரும் தலைவரை இழந்து விட்டது என்று அம்மாநில மந்திரி புசார் அஹமட் யாக்கோப் அங்கு குழுமியிருந்தவர்களின் கூட்டத்தில் பேசிய போது கூறினார்.
எனக்குத தெரிந்த ஒரே மாபெரும் நல்ல முஸ்லிம் தலைவர். இந்த உலக முஸ்லிம்களுக்கு நல்ல உதாரணம். மற்ற மதங்களை மதிக்கும் ஆன்மிக சமய குருவுமாவார்.
அன்னாரின் உயிர் சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.
ஒரு சிறந்த ஆன்மீகத் தலைவரை இழந்துவிட்டோம்.. அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்….
இனம் மதம் என்று பாராமல் எல்லோர் மனதிலும் வாழ்ந்தவர். மக்கள் மத்தியில் நல் மதிப்பு பெற்றவர். மறந்தும் அடுத்த மதத்தை அவதூறு பேசாதவர்.உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். இந்நாட்டு முஸ்லிம்கள் உங்களை போல் வாழ்ந்தால் மக்களும் நாடும் எல்லா காலங்களிலும் சுபிட்சமாக வாழ்வார்கள்….. இம்ம்ம் நடக்கணும்.
ஏழைகளின் பிரச்சினைகளை உணர்ந்தவர். ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர். உண்மையான ஏழைப்பங்காளன். அவரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போமாக…R.I.P
மந்திரி புசாராக எளிமையாக வாழ்ந்த உன்மையான தலைவார்.அன்னாரின் உயிர்சாந்தியடைய பிராத்திக்கிறேன்
நல்ல மனிதர்
ஏழைகளின் பிரச்சினைகளை உணர்ந்தவர். ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர். உண்மையான ஏழைப்பங்காளன். அவரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போமாக
ஊழல் இல்லாத அரசியல் செய்தவர் ,நேர்மையானவர் ,,ஆழ்த்த அனுதாபங்கள்
உண்மையான ஆன்மீக வாதி.நம்நாட்டு மக்கள் அனைவரின் மதிப்பையும் அன்பையும் பெற்றவர். அவரின் ஆத்மா அமைதிப் பெற பிராத்திப்போம்..!
நஜிஸ் இவரின் (***)குடித்தால் கூட புத்தி வராது