சீன வர்த்தகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்கு மன்னிப்புக் கேட்பதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.
ஆனால், தம் கருத்துக்கு இனச் சாயம் பூசப்பட்டு இன விவகாரமாகப் பார்க்கப்படுவதை எண்ணி அவர் “வருத்தம்” தெரிவித்தார்.
இந்த “வருத்தம்” மன்னிப்பு எனப் பொருள்படுமா என வினவியதற்கு இது மன்னிப்பு கேட்பதாகாது என்று கூறி விட்டார்.
இஸ்மாயில், மலாய்க்காரர்கள் விலைகளைக் குறைக்காத சீன வர்த்தகர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்டுப் பொல்லாப்புக்கு ஆளானார்.
மன்னிப்பு என்பது செய்த தவறினை அறிந்து, உணர்ந்து கோருவதே!! உணர்வற்ற ஜடங்களுக்கு/ ஜென்மங்களுக்கு மன்னிப்பு என்பது அர்த்தமற்றது..!!!
ஏற்கனவே அம்னோ தரப்பிலிருந்து உங்களுக்கு ராஜ மரியாதை கிடைத்திருக்கிறது. இப்போது மன்னிப்பது கேட்பதால் அவர்களை அவமானப் படுத்தியது ஆகும்! நீங்கள் வருத்தப்பட்டால் போதும்! சீக்கிரம் வறுத்தெடுத்துவிடுவார்கள், பொறுத்திருங்கள்!