சீன சமூகத்தின் சில தரப்பினரை மலாய்க்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கூறி பெரும் சர்சையைக் கிளப்பி விட்ட அமைச்சர் இஸ்மாயில் சாப்ரியை சுலபமாகத் தப்பிக்க விட்டது குறித்து மசீசவில் சில தரப்பினர் அதன் தலைமைத்துவத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
மசீச அடித்தள உறுப்பினர்களின் மனச்சாட்சி குழு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அத்தரப்பினர் அந்த அமைச்சர் இம்மாதத் தொடக்கத்தில் தெரிவித்த கருத்துக்காக அவர் முழுமையாக மன்னிப்பு கோரும் வரையில் இந்த விவகாரத்தைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
“இஸ்மாயில் சாப்ரியை இதற்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று கட்சி சூளுரைத்திருந்தது. தொடக்கத்தில் புலி போல் மூர்க்கமாக இருந்த அது இப்போது அடங்கி விட்டது”, என்று அக்குழு நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
அமைச்சரின் அந்த இனத்துவேச கருத்து சீன சமூகத்தினரிடையே கடும் சினத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் சீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இறுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் இஸ்மாயில் “வருத்தம்” தெரிவித்தார். அதனை மசீச தலைவர் லியோ தியோங் லாய் ஏற்றுக்கொண்டு இத்துடன் இவ்விவகாரம் முடிவுக்கு வருவதாகத் தெரிவித்தார்.
ஆனால், மசீச அடித்தள உறுப்பினர்களின் மனச்சாட்சி குழு அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்திருந்தது போதுமானதாகவோ நேரடியானதாகவோ இல்லை என்று கூறிய அக்குழு, “மன்னிப்போ இல்லையோ, நான் பதில் கூற விரும்பவில்லை”, என்று அந்த அமைச்சர் கூறியிருந்ததைச் சுட்டி காட்டியது.
“மசீச இளைஞர் பிரிவு தலைவர் சோங் சின் வூன் (வலம்) அமைச்சர் சாப்ரிக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆனால் அவரை கட்சி அவரது ஆதரிக்கவில்லை”, என்று மனச்சாட்சி குழுவின் நிறுவனர் யாப் ஆ செங் கூறினார்.
மசீச இவ்விவகாரத்தை சாதரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்கள் சாப்ரியின் கருத்தை நினைவில் வைத்திருப்பார்கள். அவர்களின் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வாக்குப் பெட்டிகளின் மூலம் கட்டவிழ்த்து விடுவார்கள் என்றாரவர்.
“அரசாங்கம் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் கூட, அது எடுபடாது”, என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அம்னோ கொடுக்கின்ற அழுத்தத்தில் அவர்கள் அவரைச் சுலபாக தப்பிக்க வைக்கும் ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது! இருந்தாலும் பிரச்சனைப் புகைந்து கொண்டு தான் இருக்கும்!
இப்படி அநியாமாக சப்ரியை விட்டுவிடக்கூடாது!
ம இ காவும் ம சீ சாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். எவனுக்கும் சமுதாயத்தின் மேல் எள்ளளவும் அக்கறை இல்லை.
என்னடா பாரிசானுக்கு வந்த சோதனை ?
நேற்று மஇகாவிலே பழனிவேலுக்கு ஆப்பு வைக்க பார்த்தாங்க
இன்று மசீசவில் லியோ தியோங் லாய்க்கு ஆப்பு வைக்க பார்க்கிறாங்க
நாளை நஜிபுக்கு சிருல் ஆப்பு வைக்க போகிறார்
விலைபோன கட்சி இருந்தால் என்ன இறந்தால் என்ன??? வெறுமனே வாய்ப்பேச்சில்தான் வீரனடி இவங்கள்!!!!! அம்னோ அமைச்சரென்றால் இவன்களுக்கு சுருங்கிவிடும்!!!!
சிங்கப்பூர் சிறிய நாடு. சிறந்த அமைச்சர்கள் செயல் திறன் நாட்டின் முன்னெற்றம்.
MIC MCA நல்லா UMNO …………… வல்லவனுங்க்க
ஆப்பு ஆப்பு ஆப்பு எங்க பார்த்தாலும் ஆப்பு
ஐயா விகடா..அங்கேயும் நமக்கு இதே நிலைமைதான் ..கொஞ்சம் போய் பாருங்கள்..இக்கரைக்கு அக்கறை பச்சை..சமிபத்தில் நடந்த தைபுசம் சம்பவம் ஒரு எடுத்துகாட்டு ..
அங்கு பேரணி நடத்தினால் isa ஆப்பு வைக்கும்..
சாந்தி, சிங்கப்பூர் சிறிய நாடு என்றாலும் சிறந்த முன்னெற்றம் அடைந்துள்ளது. அந்நாட்டின் தலைமைத்துவம் அதற்கு சிறந்த சான்று.