சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் கூறியது.
அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியதை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
லீ,91, நிமோனியா காய்ச்சலால் கடந்த பிப்ரவரி 5 -ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
“அவரின் மருத்துவர்கள் அவருக்கு மீண்டும் எண்டிபயோடிக்ஸ் கொடுக்கத் தொடங்கி அணுக்கமாகக் கவனித்து வருகிறார்கள்”, என்று அந்த அறிக்கை கூறிற்று.
21ம் நூற்றாண்டின் சாதனையாளன் …. இவரிடம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது….. கற்றுக் கொள்வானா நம் மலேசியா அரசாங்கத்தைச் சேர்ந்தவன்….