அம்னோ தொகுதித் தலைவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வார்கள். ஆனால், அச்சந்திப்புக் கூட்டத்துக்கும் அம்னோவில் உள்பூசல் என்று கூறப்படுவதற்கும் தொடர்பில்லை.
“அம்னோவில் பிளவு எதுவும் இல்லை”, என செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி கூறினார்.
அம்னோவில் நஜிப்புக்குச் சில தரப்பினர், குறிப்பாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு அணுக்கமானவர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக வதந்திகள் உலவுகின்றன.
இச்சந்திப்புக் கூட்டம் மார்ச் 8-இல், நடைபெற திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுவரை, அம்னோவின் 191 தொகுதிகளில் 170 அதில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளன.
மார்ச் 7-இல் எதிரணியினர் பிரதமரைப் பதவி விலகக் கோரி மாபெரும் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
MARCH 8, 2014 – MAS 370 தனது பயணத்தை முடித்து கொண்டது.
MARCH 8, 2015 – UMNO மன்னிக்கவும் UMNO BARU தனது பயணத்தை முடித்து கொள்ள போகிறது.
MARCH 9, 2015 – மலேசியாவின் புதிய பிரதமர் யார் ?????
நேற்று இருந்தவர் இன்று இல்லை
இன்று இருப்பவர் நாளை இருப்பது யாருக்கு தெரியும்
இந்த விளக்கெண்ணை மார்ச் 8ம் தேதி நாள் குறிக்குது
நல்ல பொழப்புடா
இங்கு எவனுக்குமே இந்நாடு உண்மையிலேயே மத இன நல்லிணக்கத்துடன் ஒற்றுமையுடன் சமதர்மத்துடன் வாழவேண்டும் என்ற எண்ணமே கிடையாது. பிரிவினையில் குட்டையை கிளப்பி மீன் பிடிக்கவே எல்லாம்.
பிரதமர் ஆதரவுக் கூட்டத்துக்கும் அம்னோ உட்பூசலுக்கும் தொடர்பில்லை என்று சொல்லும்போதே இதில் ஏதோ தொடர்பு இருக்கின்றது என்று மக்களுக்கு சந்தேகம் வந்து விடாதா?. இந்த தற்குறி தன்னை அம்னோ தலைவர் என்று பறைசாற்றிக் கொள்வதில் இருந்து இது உருப்படாத கட்சி என்பது நிரூபணமாகி விட்டது.