அடுத்த மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடரை பேரரசர் திறந்து வைக்கையில் அவருடன் தே நீர் அருந்துவதற்கு எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவரது மகளும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
தம்முடன் சேர்ந்து தே நீர் அருந்துவதற்கு பேரரசர் விடுத்துள்ள அழைப்பை நிறைவேற்றுவதற்கு அன்வார் அனுமதிக்கப்பட வேண்டும். இச்சடங்கில் எதிரணித் தலைவருக்கு சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது என்று நூருல் கூறினார்.
மார்ச் 9 லிருந்து ஏப்ரல் 9 வரையில் நடைபெறும் நாடாளுமன்ற தொடர் கூட்டத்தில் பங்கேற்க அன்வாருக்கு நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா விடுத்திருந்த அதிகாரப்பூர்வமான அழைப்பை நுருல் செய்தியாளர்களிடம் காட்டினார்.
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.
தேநீருக்கு ஏன் இந்த அங்கலாய்ப்பு. மணியடிச்சா கொடுத்து விட்டுப் போகின்றார்கள்.
இவ்வளோ நாள் குடிச்சது போதாது போலும்…..மிகவும் வேடிக்கையாக இருக்கிறது ……நடக்கட்டும்…. நடக்கட்டும்…..
அடபாவி….