ஜூன் மாத பாஸ் கட்சித் தேர்தல் பழமைவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்குமிடையிலான போட்டியாக இருக்கும் எனப் பரவலாகக் கருதப்பட்டு வரும் வேளையில், “மூன்றாவது சக்தி” ஒன்று அம்னோவின் ஆதரவுடன் இடையில் புகுந்து குட்டையைக் குழப்புவதாக பாஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
பாஸில் துணைத் தலைவர் முகம்மட் சாபு, மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் ஹட்டா ரம்லி போன்ற முற்போக்காளர்களின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஓர் இயக்கம் நடப்பதாகக் கூறிய பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் முஜாஹிட் ராவா, அதற்குப் பின்னணியில் அம்னோவின் “மறைமுகக் கரங்கள்” இருக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை.
“இஸ்லாமிய உலாமாக்களுக்கும் முற்போக்குவாதிகலுக்குமிடையிலான போட்டி என்ற நிலை இனியும் இல்லை.
“மூன்றாவது சக்தி ஒன்று கட்சியில் குறிப்பிட்ட தரப்பை ஆதரிக்கிறது. அவர்களின் நோக்கம் கட்சி முன்னேறக் கூடாது என்பதுதான். கட்சி எப்போதும் பின்தங்கி இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நினைப்பாகும்”, என முஜாஹிட் கூறினார்.
தெரிந்தும் தெரியாததுபோலவும் புரிந்தும் புரியாததுபோல நடிப்பதும் ஆதரவாளர்களினிடையே வெறுப்பினையே தூண்டிவிடும். கட்சியின் பின்னடைவுக்கு “மூன்றாவது சக்தி” தேவையில்லை. 13வது பொதுத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் உள்ள மாற்றத்தினை அறிந்து புரிந்து நடந்துக்கொண்டால் பாசுக்கு நலம்.
பாஸ் கட்சி ஒரு முக்கியமான சவாலை எதிர்கொண்டுள்ளது. அம்னோ செய்யும் சதி வேலை, முற்ப்போக்கு சிந்தனை இல்லாத தலைவர்கள் என்பன சிலவாகும். இக் கட்சி முற்போக்குவாதிகளின் கைகளில் கிடைத்தால் பாக்கத்தான் மிக பலமிக்க உள்ளதாக மாறிவிடும் என்று அம்னோ சதிகாரங்களுக்கு நன்கு தெரியும். இறைவன் இந்நாட்டை காக்க வேண்டுவோம்.
பிற்போக்கு உடைய பாஸ் கட்சியில் முற்போக்குவாதிகளுக்கு என்ன வேலை?. நடையை கட்டுங்கள்.