கேலிச்சித்திர ஓவியரான ஸூனார் மீண்டும் போலீசில் சிக்கிக்கொள்ளப் பார்த்தார். ‘Ros in Kangkung Land’ என்ற கேலிச்சித்திரத்துக்காக போலீசார் அவரைக் கைது செய்ய முயன்றனர்.
இன்று காலை, பிரிக்பீல்ட்சில் ஸுனாரின் நூல் வெளியீடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சுமார் 20 போலீசார் அங்கு வந்தனர்.
நூல் வெளியீட்டுக்கு அனுமதி பெறவில்லை என்றும் அதற்காக அவரைக் கைது செய்யப்போவதாகவும் அவரிடம் தெரிவித்தனர்.
“ஆனால், அவர்களிடம் அந்நிகழ்வு தனியார் இடத்தில் நடப்பதாகவும் அதற்கு அனுமதி தேவையில்லை என்றும் தெரிவித்தேன்”, என்று ஸூனார் கூறினார்.
எதிர்க் கட்சியின் ஆதரவாளர்களையும் தலைவர்களையும் அடக்குவதும் முடக்குவதும்தான் போலீசின் முதற் கடைமையோ/ முக்கியத்துவமோ????
நிலைமை அளவுக்கு மீறி செல்வதுபோல் தெரிகிறதே! அன்றைய மலாக்காவில் சருகு மான்தானே என்று நினைத்து “காட்டு நாய்” ஓன்று துரத்தியதாம்.ஆக்ரோஷம் ஏற்பட்டு சருகு மான் அந்த காட்டு நாயை எதிர்த்து நின்றதாம்.துரத்தி வந்த நாய் அதிர்ச்சியில் வாலை சுருட்டிக் கொண்டு வந்த வழியே திரும்பியதாம்.இந்த வரலாற்றுக் கதை சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியாதா என்ன?
அம்னோ குண்டர்களுக்கு ஆட்சியிலிருக்கும் நாதாரிகளுக்கு அடிவருடியே பழக்கப்பட்டு விட்டது.அத்துடன் எதிராக உள்ளவர்களை பிடிப்பதில் இவன்களுக்கு ஒரு தனி இன்பம்.
கண்ணுக்குத் தெரிந்த யானை போன்ற பெருச்சாளிகளை விட்டு விட்டு கண்ணுக்கு தெரியாத எறும்பைப் பிடிப்பதில் நமது காவல் துறை பலே கில்லாடியாக செயல்படுவது போல் தெரிகின்றது.