பாஸ் தலைவரை பதவி விலகச் சொல்வது பெரிய பாவம் அல்ல

 

Pasleaderto resignnosinகிளந்தான் பாஸ்சின் அடித்தள தலைவர்களில் ஒருவர் பாஸ் கட்சியின் தலைவரை பதவி விலகச் சொல்வது ஒரு பெரிய பாவம் அல்ல, ஏனென்றால் அது இந்த இஸ்மாலியக் கட்சியின் வரலாற்றில் புதிதான ஒன்றல்ல என்றார்.

இதனைக் கூறியவர் கோத்தாபாரு இளைஞர் பிரிவுத் தலைவர் ரோஸ்லி அல்லானி அப்துல் காதர். அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் தலைமைத்துவ தேர்தலுக்கு முன்பாக கட்சியில் நெருக்கடி ஏற்பட்டிருப்பது குறித்து அவர் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார்.

“நாம் குறைகூறல்களை கையாளும் விதம் பாஸ் ஒரு வெளிப்படையான கட்சி அல்ல என்பதைக் காட்டுகிறது. இதில் கட்சித் தலைவர்களை கேள்வி கேட்பவர் தவறு செய்தவராக கருதப்படுகிறார்.

“கட்சித் தலைவர்களிடம் பதவி விலகுமாறு எந்த உறுப்பினராவது கூறினால் அவர் கட்சியின் தலைவருக்கு விசுவாசமற்றவராக இருப்பதால் பெரும் பாவம் செய்து விட்டவராக கருதப்படுகிறார்”, என்று ரோஸ்லி இன்று விடுத்த அறிக்கையில் கூறினார்.

கடந்த காலத்தில் இவ்வாறு நடந்ததில்லை என்று கூறிய ரோஸ்லி, காலஞ்சென்ற பாஸ் ஆன்மீக தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் 1982 ஆம் ஆண்டில் பகிரங்கமாக பெரித்தா ஹரியானில் கட்சியின் அன்றையத் தலைவர் அஸ்ரி மூடாவிடம் கேள்வி எழுப்பியிருந்ததைச் சுட்டிக் காட்டினார்.

கட்சியின் வரலாற்றில் நிகழ்ந்த இம்மாதிரியான சம்பவங்கள் கட்சியை நெருக்கடிக்கு இட்டுச் செல்லவில்லை என்று ரோஸ்லி மேலும் கூறினார்.