தமது மகனை ஆஸ்திரேலியா பாதுகாக்கும் என நம்புகிறார் சிருலின் தாயார்

 

sirul'smumhopesதனது நாட்டில் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் தமது மகனுக்கு ஆஸ்திரேலியா “முழு பாதுகாப்பு” அளிக்க வேண்டும் என்று மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமாரின் தாயார் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

“மலேசியாவுக்கு திரும்பிப் போவதை விட ஆஸ்திரேலியாவில் இருப்பது இன்னும் கூடுதலான (பாதுகாப்பு) ஆகும்”, என்று பியா, 74, கூறியதாக எபிசி செய்தி கூறுகிறது.

தமது மகள் நோரியாடின் ஒமார், பாஸ் தகவல் பிரிவு தலைவர் மாபுஸ் ஒமார், பாஸ் பொருளாலர் அஸ்முனி அவி மற்றும் பாஸ் வெளிவிவகார பேச்சாளர் டாக்டர் சைட் அஸ்மான் ஆகியோருடன் பியா தற்போது சிட்னியில் இருக்கிறார்.

அவர்கள் நாளை சிருலை சந்திக்கவிருக்கின்றனர்.