எதிரணித் தலைவர் அனவார் இப்ராகிம், அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி கேட்டு செய்துகொண்ட விண்ணப்பத்தைச் சிறைத்துறை நிராகரித்தது.
அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் கடிதம் அன்வாரின் வழக்குரைஞர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதாக பிகேஆர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிஎன் ஆதரவாளர் மன்ற இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தி ஒன்று, சிறை விதிகளின்படி அன்வாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியது. நிராகரிப்புக் கடிதத்தின் பிரதி ஒன்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டது.
புதியது ஒன்றும் இல்லை. தெரிந்த கதை.
தெரிந்த பழைய கதை.
உம்னோ ஆட்சியில் இது நடப்பது சகஜம் புளித்துப்போன கதை .
நீர் வந்து மட்டும் என்ன செய்ய போறீர் …உள்ளேயே இருங்கள் மாமோய்…….அதுதான் உங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது..
shanti நீ வெளியே இருந்து மட்டும் என்னத்த கிழிச்சே…… அடுத்தவனை புரணி பேசறதும்.நக்கல் பண்ணுறதும் உனக்கு நல்ல படுதா? அவர் செய்த தவறை நாம் நம் கண் கொண்டு பார்க்கவில்லை. நமக்கு தீர்ப்பு சொல்ல தகுதியும் இல்லை. குற்றமற்றவன் குற்றவாளி ஆக்கப் படுவது தர்மம் ஆகாது. உண்மை அதுவானால் ஒரு நாள் உண்மையும் தர்மமும் ஜெய்க்கும்.இதுதான் உலக நியதி.இந்து மதத்தின் தலையாய மந்திரம்.
சரி அப்பு ..நெற்றிகண் திறந்தாலும் குற்றம் குற்றமே..பாவம் சைபுல் ..இன்று மன உளைச்சலில் இருக்கிறான் ..இதற்க்கு இதற்க்கு யார் பதில் சொல்வது…
பணம் பத்தும் செய்யும் சாந்தி க்கா……… உங்கள கட்டிகிட்டு என் மாமன் எப்படி குப்பை கொட்டுராறோ அந்த ஆண்டவனுக்கு வெளிச்சம்.
ஆக, அரசாங்கம் அனுமதி கொடுத்தது! சிறைத்துறை தான் அனுமதி கொடுக்கவில்லை! அரசாங்க விதிமுறைகளை விட சிறைத்துறைகளின் விதிமுறைகள் மிக மிகக் கடுமையானவை போலும்! மெய் சிலிர்க்கிறது!
எது அனுமதி கொடுத்தாலும் …குற்றவாளி நாடாளுமன்றம் செல்ல அனுமதிக்க கூடாது…டாட்.
வணக்கம். நாம் சாந்தி சொல்வது ஒருபுறம் இருக்க. நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். குற்றவாளி யார் என்பது முக்கியம் இல்லை ஆனால் தண்டனை பெறுபவர்களை நாடாளுமன்றத்திற்கு செல்ல அனுமதித்தால், இதையே காரணம் காட்டி மற்றவர்களும் இதையே செய்வார்கள். இங்கே அநீதி இழைக்கப்பட்டிரிக்கிறது என்று எடுத்து கொண்டாலும் தண்டனை பெற்று தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை. நாட்டின் எதிர்காலத்திற்காக ஒருவர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அவர்களின் போராட்டம் என்றும் ஒடுங்கி விடாது மேலும் சிறை ஒருவரை அடக்கிவிட முடியாது.
காவல்துறை அவன் பக்கம் .
ஒரு காலத்தில் கணவனை பிரிவது எல்லா மதத்திலும் தவறு. இன்று விவாகரத்து என்ற பேரில் அடை செய்யலாம். ஒரு காலத்தில் மக்களை ஏமாற்றுவது தவறு. இன்று அரசியல் என்ற போர்வையில், எல்லாம் செய்யலாம். ஆகையால் நெற்று எது தவறோ , இன்று சரியாகி விட்டது. இன்று எது தவறோ அது நாளை சரியாகி விடும். நெல்சன் மண்டேலா, ஜெயிலில் இருந்தாலும் ஆப்ரிக்காவின் சுந்திரத்தை ஜெயிலில் இருந்துதான் செதுக்கினார். அன்வார் இல்லை என்றாலும், இன்னும் நுறு அன்வார் உருவாக வேண்டும். வாழ்த்துவோம்.
Dhilip 2 சொல்வது முற்றிலும் உண்மை. கணவன், மனைவி பிரிவது சட்டவிரோதமாக இருந்தது. விவாகரத்து சட்டத்தின் மூலம் சட்டரீதியாகினார்கள். பொய் சொல்லி ஜனங்களை ஏமாற்றுவது சட்டவிரோதமாக இருந்தது. தேர்தல் வாக்குறுதி மூலம் அதை சட்டரீதியாக்கினார்கள். மந்திரிகள் கொள்ளையடிப்பது சட்டவிரோதமாக இருந்தது. ‘மான்யங்கள்’ மூலம் அதை சட்டரீதியாக்கினார்கள். கள்ள மார்கெட் வியாபாரம் சட்டவிரோதமாக இருந்தது. GST வாயிலாக அதை சட்டமாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் விலைமாதர்களை தேடிப்போவது சட்டவிரோதமாக இருந்தது. அந்த தேவடியான்கள் பல பெண்களை மணம் புரிந்துகொள்ள சட்டம் வகுத்துவிட்டார்கள். இன்னும் நிறைய உண்டு. பட்டியல் நீளும் என்பதால், இத்துடன் ‘புல்ஸ்டாப்’.