உக்ரேயினில்கூட குற்றவாளி எம்பி நாடாளுமன்றம் செல்ல அனுமதிக்கப்பட்டார்

ukrகுற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை  எந்த  நாடும்  நாடாளுமன்றக் கூட்டத்தில்  கலந்துகொள்ள  அனுமதிப்பதில்லை  என்ற  அரசாங்கத்தின்  வாதம்  அறியாமையைத்தான்  காண்பிக்கிறது  என  பிகேஆர்  சாடியுள்ளது.

“அரசியல் கைதிகளை  எந்த  நாடும்  நாடாளுமன்றக்  கூட்டங்களில்  கலந்துகொள்ள  அனுமதிப்பதில்லை  என்ற கூற்று  அரசாங்க  நிர்வாகத்தில்  உள்ள  சிலரின் குறுகிய  புத்தியைதான்  காண்பிக்கிறது”, என  பிகேஆர்  இளைஞர்  துணைத்  தலைவர்  அபிப்  பஹார்டின்  கூறினார்.

உக்ரேயினில், 2011,  அக்டோபர்  11-இல்,  எதிரணித்  தலைவர்  யுலியா  தைமோஷெங்கோ  அதிகாரமீறல்களுக்காக  ஏழாண்டுச்  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டிருந்த  நிலையிலும்  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  கலந்துகொள்ள  அனுமதிக்கப்பட்டார்  என்பதை   அவர்  சுட்டிக்காட்டினார்.