சனிக்கிழமை கோலாலும்பூரின் மையப் பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் கித்தா லவான் பேரணி, பல காரணங்களால் சட்ட விரோதமானது என துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார்.
அதில் ஆற்றப்படும் உரைகள் தேச நிந்தனைக்குரியவையாக இருக்கலாம். அரசாங்கத்தை மிரட்டுவது போன்ற செயல்களும் குற்றவியல் சட்டத்தை மீறுபவையாக இருக்கும்.
“அரசாங்கத்தையும் மற்றவர்களையும் மிரட்டுவதற்காகக் கூடுகிறார்கள் என்றால் அது தவறாகும்.
“அரசாங்கம் விரும்பாததைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவது. அதற்காக மிரட்டுவது, குற்றவியல் சட்டத்தின் 141, 142, 143 பிரிவுகளின்படி குற்றமாகும்”, என நூர் ரஷிட் தெரிவித்தார்.
மார்ச் 7-இல் சோகோ விற்பனை மையத்துக்குமுன் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம், அரசாங்கத் தலைவருக்குரிய கடமைகளைச் செய்யத் தவறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் நோக்கம் கொண்டது.
அத்துடன் சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அது முன்வைக்கும்.
முன்கூட்டியே தெரியப்படுத்தாதற்காக ஒரு பேரணியைச் சட்ட விரோதமானது எனப் போலீசார் அறிவிக்க முடியாது என்கிறார்கள் வழக்குரைஞர்கள்.
பத்து நாள்களுக்குமுன் பேரணி பற்றித் தெரியப்படுத்தத் தவறுவது குற்றமாகும் எனக் கூறும் அமைதிப் பேரணிச் சட்டத்தின் பிரிவு 9(5) அரசமைப்புக்கு முரணானது என முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
அதைப் பற்றிக் கருத்துரைத்த நூர் ரஷிட், அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.
சில காரணங்களை வைத்து விரோதமில்லாமல் செய்து விடுங்களேன்!
மாமாவுக்கு தானே இந்த பேரணி…
shanti ,மாமாவுடன் அனுபவித்த ஆழமான
அனுபவத்தால் மாமா என்ற உறவுக்கு அர்த்தம் ஆழமாக தெரிகிறது என்று நினைக்கிறேன்![குறைந்தது விளக்கு பிடித்த அனுபவமாவது இருக்கணும்]
உம்னோவின் கை பாவை பேசுகிறான் .
சரியான நெத்தியடி சாந்திக்கு.நிஞ்சா நான் சொல்ல வந்தததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.இன்னும் இம்மாதிரி ஜென்மங்கள் எல்லாம் நடமாடதான் செய்கின்றன.அப்படி என்னதான் செய்ததோ இந்த அம்னோ அரசாங்கம். பொறுங்கள் gst அமலாக்கத்திற்குப் பின் மக்கள் பாடு திண்டாட்டம்தான்.தொலைப்பேசிக்கு 10 ரிங்கிட் ‘ரீலோட்’ செய்தால் 60 சென் கொடுக்க வேண்டும்;ஒவ்வொரு முறையும் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுக்கும் போதும் வரி செலுத்த வேண்டும்.யாரு வீட்டு பணம் எவன் சாப்பிடுவது.அரசாங்கத்தை மாற்றுங்கள்;இல்லை தெருவில்தான் அனைவரும் நிற்க வேண்டும்.
சோதியன் உங்களைப்போல் சிந்திக்கக்கூடியவர்கள் இந்த நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு அவசியமானவர்கள்,உண்மையை அறியாதவர்கள் வெகிலியாக இருந்தால் வருத்தப்படலாம்,ஆனால் அநியாயமும் அக்கரமும்
நடத்திவருபருக்கு ஜால்ரா அடிக்கும் சுயநலவாதிகளை கண்டால் என் உள்மனது தீயாக எரிகிறது.
சரியான நெத்தியடி சாந்திக்கு
அட போங்கையா..முதலில் கூட்டனியை கவனியுங்கள்…அங்கே சீனன் மாமா ஒருவன் தனக்கு ஏன் வம்பு என்று ஓடி ஒளிகிறான்..நல்ல ஒற்றுமை ஐயா மாங்கா கூட்டனி.
“MH 370” திரைப்படம் பொன்விழாவை நோக்கி வெற்றிகரமாக ஓடுவதை கொண்டாடும் மகிழ்ச்சியில் மக்கள் இந்த “KITA LAWAN” பேரணியில் கலந்து கொள்வதை பெருமையாக நினைக்கிறார்கள்
எதிர் தரப்பு கட்சிக்கோ, மக்கள் கருத்துக்கோ இந்த அம்னோ அரசாங்கம் செவி சாய்க்காது.அரசாங்க பதவிக்கு ஆப்பு கெடைக்குமே, சட்ட விரோதம் எதாச்சும் சொல்லி மக்களே பயம் கொடுத்திறது இந்த போலிஸ் கிழட்டு போலிஸ்!
சாந்தி,கவனம் முதலைகள் கூட்டத்தில் இருக்கும் நீங்கள் ஒரு நாள் முதலைக்கே இரையாகிவிதுவீர்கள்.