மாபுஸ்: சிருல் தாயாரின் பயணத்துக்குச் சொந்த பணத்தைச் செலவிட்டேன்

mafகொலைக்  குற்றம்  சாட்டப்பட்டுள்ள  சிருல்  அஸ்ஹார்  உமரின்  தாயார்  பியா  அஹ்மட்,  சிருலைப்  பார்ப்பதற்கு ஏற்பாடு  செய்த  பாஸ்  தகவல்  தலைவர்  மாபுஸ்  ஒமார்  அந்த  “மனிதாபிமான  பயணத்துக்கு”  தம்  சொந்த  பணத்தைச்  செலவு  செய்ததாகக்  கூறினார்.

மாபுஸ்,  சிருலின் தாயாரையும்  சகோதரி  நோரியாதின்  உமரையும்  மேலும்  நால்வரையும்  ஆஸ்திரேலியாவின்  சிட்னிக்கு  அழைத்துச்  சென்றார்.

“அதற்கு  என் பணத்தைச்  செலவிட்டேன்”, என  மாபுஸ்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அவரது  பயணம்  பலத்த  குறைகூறலுக்கு  இலக்காகியுள்ளது.
மங்கோலிய பெண்  அல்டான்துன்யா  கொலைக்காக  மரண தண்டனை  விதிக்கப்பட்டுத்  தப்பியோடிய  ஒரு  கைதியைச்  சந்திப்பதற்கு  பாஸ்  பெரும்  பணத்தைச்  செலவிடுவது  ஏன்  என்று  சிலர்   கேள்வி  எழுப்பியுள்ளனர்.

அதைப்  பற்றி  மாபுஸிடம்  வினவியதற்கு,  அது வயதான  தாயாருக்காக  மனிதாபிமான  முறையில்  ஏற்பாடு  செய்யப்பட்ட  பயணம்  என்றார்.

மேலும், நாட்டையே  உலுக்கிய  கொலைக்கான  நோக்கத்தைக்  கண்டறிவதும்  அப்பயணத்தின்  குறிக்கோளாகும்  என்றாரவர்.

“இரண்டாவதாக,  நீதிமன்றத்தில்  தெரிவிக்கப்படாத  நோக்கத்தைக்  கண்டறிவது….. எனக்கு  உண்மை  தெரிய  வேண்டும்”, என்றார்.

ஆனால்,  தங்கள் சந்திப்புகளில்   கொலை  பற்றி  சிருல்  எதையும்  கூறவில்லை  என  மாபுஸ்  தெரிவித்தார்.

அல்டான்துன்யா  கொலைக்கு   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  பழி  போடுவதற்காக  எதிரணி  சிருலுக்குப்  பண உதவி  செய்து  வருவதாக  அம்னோ- ஆதரவு  வலைப்பதிவு  ஒன்று  குற்றஞ்சாட்டியிருப்பதை  அந்த  பொக்கோக் சேனா எம்பி  மறுத்தார்.