பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட், இன்று காலை சுபுஹு தொழுகை
முடித்து விட்டுத் திரும்பிய வேளை தாக்கப்பட்டார்.
அவர் முகத்திலும் நெற்றியிலும் குத்துப்பட்டார் என பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்ஸன் சுல்கிப்ளி முகநூலில் கூறியிருந்தார்.
“தாக்கிவிட்டுச் செல்லுமுன்னர் ஏன் மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறீர் (kenapa kurang ajar sangat)? எனத் தாக்குதல்காரன் வினவினான்”, என சுஹாய்ஸன் கூறினார்.
“இச்சம்பவத்துக்காக பாஸ் இளைஞர் பகுதி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. இது பிளவை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். அவர்களின் தீய நடத்தைக்காக அல்லாஹ் கூலி கொடுப்பானாக”, என்றவர் முகநூல் பதிவில் கூறியிருந்தார்.
ஆன்மிகவாதியாக இருந்தாலும், சரி, அரசியல் வாதியாக இருந்தாலும் சரி பதவி, போட்டி என்று வரும்பொழுது அடி,உதைதான் முன்னுக்கு வருகிறது.