மார்ச் 9 நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள அன்வார் இப்ராகிமுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் பேரரசரின் அரச உரைக்கு எதிரணித் தலைவர் என்ற முறையில் அவர் நன்றி தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ உரை மக்களவையில் ஒலிக்கவே செய்யும்.
அன்வாரின் மகள் நுருல் இஸ்ஸா அன்வார் இதை உறுதிப்படுத்தினார்.
பிகேஆர் அதன் எம்பிகளில் ஒருவரை அன்வார் சார்பில் உரையாற்ற நியமிக்கும் என மலேசியாகினிக்குத் தெரிய வருகிறது. அன்வாரின் மூத்த மகள் நுருல் இஸ்ஸாவே அதை வாசிக்கலாம்.
நாடாளுமன்றத்தில் எதிரணித் தலைவரின் உரை இடம்பெறாது போகக் கூடாது என்பதால் டிஏபி-யும் இந்த ஏற்பாட்டுக்கு உடன்படுவதாக அதன் தேசிய ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் அந்தனி லோக் கூறினார்.
அன்வார் என்ற மனிதர் உள்ளே இருந்தாலும் இன்னும் அவரே எதிரணித் தலைவர்.அவரின் உரை இடம்பெறுவதுதான் முறை.மலேசியாவின் அரசியல் புழுகி நாற்றமெடுத்து உலகெங்கும் துர்நாற்றம் வீசுகின்றது.பாவம் செய்தவன் வெளியே சொகுசாக ஒரு திருமணமும் செய்து கொண்டு வாழ்கிறான்;ஆனால் தப்பு செய்யாதவன் சிறையின் உள்ளே வாடுகின்றான்.என்னையா நியாயம் இது?தேசிய முன்னணியும் அதன் ஜால்ராக்களும் உண்மையில் மதிகெட்ட கேவலமான ஜென்மங்கள்.காறி உமிழ்ந்தால் அவ்வெச்சிலும் கூட வெட்கப்படும்.ப்ண்ணாடைகள்