போலீஸ் காவலில் இருந்த சி.சுகுமாறனின் இறப்புக்கு போலீஸ்தான் பொறுப்பு என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பளித்துள்ளார்.
சுகுமாறனின் மரணத்தை விசாரித்த கொரோனர் ரோஸி பைனுன், காயமடைந்திருந்த சுகுமாறனை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும் சட்டப்படி செய்திருக்க வேண்டிய அதை அவர்கள் செய்யத் தவறிவிட்டதாகவும் கூறினார்.
“அவர் இருதய நோயால் இறந்து போனார். போலீஸ் தடுத்து வைத்ததால் ஏற்பட்ட மூச்சடைப்பும் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை”, என்றவர் தீர்ப்பளித்தார்.
இனி, சுகுமாறனின் மரணம்மீது தேவையான விசாரணைகளைத் தொடங்குவது சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், போலீஸ் ஆகியோரின் பொறுப்பாகும் என்றாரவர்.
சுகுமாறனின் கைது “கொடூரமானது வழக்கத்துக்கு மாறானது” என்பதையும் அவர் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மரண விசாரணையில் சாட்சியமளித்தவர்கள் போலீசார் இரண்டு விலங்குகளைக் கொண்டு அவரின் கைகளுக்கு விலங்கிட்டார்கள் என்றும் ஏறி மிதித்தார்கள் என்றும் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.
39-வயது பாதுகாவலரான சுகுமாறனை காஜாங்கில் கட்டுக்கடங்காத வெறி பிடித்திருந்த நிலையில் போலீசார் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்தனர்.
பொதுவாக,ஒருவரை குற்றவாளி என்ற கருத்தில் போலிஸ் அவரை கைது செய்யலாம்,அவர் குற்றவாளியா, நிரபராதியா என்று நீதிமன்றம்தான் நிர்ணயிக்க வேண்டும்.அதுதான் போலிஸ்…… காவல்.
அரசு அன்றே கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். அநியாயக்காரர்களின் ஆட்சியில் அட்டூழியங்கள் எவ்வளவு நாட்களுக்குத்தான் என பொறுத்திருந்து பார்ப்போம். அநியாய ஆட்சி நீடித்ததாக சரித்திரம் கிடையாது.
அநீதி போய்க்கொண்டேதான் இருக்கும்…. 57 ஆண்டுகள் அநீதி … அநீதி செய்தவர்கள் நன்றாக வாழ்ந்து இறந்து விட்டார்கள்… தெய்வம் தண்டனை கொடுப்பதட்குள், இந்த உலகம் அழிந்துவிடும் … இதுதான் கலியுகம் …
வெறி பிடித்த நிலையில் ஒருவர் இருந்தால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். காவல் நிலையத்திற்கு அல்ல. சுகுமாரன் குடும்பத்தினருக்குத் திருப்திகரமான அளவுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
சாந்தி என்ற சொறி….. இந்த செய்தியை பற்றி ஏன் கருத்து சொல்லவில்லை ? இந்த கொடுமை நடந்து கொண்டிருப்பது தங்கள் தலைவன் மங்கோலிய கொ….. ஆட்சி என்பதலா?
நல்லவரு வல்லவரு போயிட்டாரு…