நாளை கோலாலும்பூரில், கித்தா லவான் கூட்டமைப்பு எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக நடத்தும் பேரணியில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கலந்துகொள்ள மாட்டார்.
சோகோ விற்பனை மையத்துக்கு வெளியில் மாலை நான்கு மணி தொடங்கி நள்ளிரவுவரை நடைபெறவுள்ள அப்பேரணி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கும்.
“மாநில அளவில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் இருக்கின்றன”, என்று லிம் கூறினார்.
வார இறுதியில் மூத்த குடிமக்களுக்கு ரிம100 ரிங்கிட் வழங்கும் நிகழ்வுகள் இருப்பதாகவும் அவற்றில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிதியை வழங்குவார்கள் என்றும் அவர் சொன்னார்.
“அது மக்களுக்கான ஒரு நிகழ்வு. எனவே, அதற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகிறது”, என்று லிம் குறிப்பிட்டார்.
அப்போ இது மக்களுக்கான நிகழ்வு அல்லவோ? சீனன் தன் புத்தியை காமித்து விட்டான்.
மறைமுகமான எதிர்ப்பு ….கூட்டணி பிளவு நிச்சயம்….வாழ்த்துக்கள்
கலந்து கொண்டால் “உள்ளே” தள்ளுவதற்கு இவர்கள் தயாராக இருக்கிறார்கள்! அப்புறம் பலவிதமான சட்டச் சிக்கல்கள் ஏற்படும். பினாங்கு காக்காய்கள் எப்படி இவரை உள்ளே தள்ளலாம் என்று ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவரின் முடிவு சரியானதே!
இந்த குட்டித் தலைவர் சைனாவில் சொத்து சேர்த்து விட்டார். இவரது அப்பன் பலே கில்லாடி. சிங்கப்பூரில் சில ஹோட்டல்களுக்கு சொந்தக்காரர். இனிமேல் எதற்கு வம்பு என ஒதுங்குகிறார்கள். சுயநலப் பேய்கள்.
தோ பாருடா…..இதைதான் மக்களே நானும் சொல்கிறேன்…கடைசியில் சீனன் செஞ்சிருவான்….
abraham உங்களுது சிங் சக செம்மே…..
அப்பன்& மகன் சொத்துக்களோடு BN. மகாதிர்.நஜிப்பு&ரோஷ்மா.மற்றும் bn முதலைகளின் சொத்துக்களை பூதக்கண்ணாடியில் பார்த்து பட்டியல் இடுங்கள் சிங்கம் அவர்களே!
எல்லரோரையும் தூக்கி உள்ளே வெச்சா யாரு பார்லிமென்ட்லே கல்வி கேட்கிறது? பெனாங் மினிஸ்டர் அறிவாளி சிங்கப்பூர் மினிஸ்டர் போலே.உம்னோ, பிஎன் சட்டம் பத்தியும் எல்லோருக்கும் தெரியுமே !
பக்காத்தான் தலைவர்கள் சிலரை குறைகூறுவதால், பாரிசானை ஆதரிப்பதாக அர்த்தமாகாது. பாக்கத்தான் தலைவர்கள் வெறும் நெத்திலி மீன்கள்தான். பாரிசானின் கருநாகங்கள், திமிங்கிலத்தையே முழுங்குபவை. தற்போதைய பாரிசானை மக்கள், தூக்கி குப்பையில் எறியவில்லை எனில் மலேசியர் அனைவருக்கும் சங்குதான்.