சூதாட்ட மன்னன் பால் புவாவின் மகன் டேரன் புவா, உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின்போது சட்டவிரோத சூதாட்டக் கட்டமைப்பு ஒன்றை நடத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
டேரனுக்கு மலேசியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் வந்து விட்டதாம். அதனால்தான் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதென்ற முடிவுக்கு வந்திருப்பதாக Casino.org இணையத் தளம் கூறிற்று.
“மகன் ஒப்புக்கொண்டுள்ள வேளையில் புவா சீனியர் குற்றச்சாட்டை எதிர்த்துப் போராடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்”, என்றும் அது கூறியது.
பால் புவா வழக்கு மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்காகும். அதற்கு பால் புவா தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் உதவியுள்ளார் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அவருக்கு ஆதரவுக் கடிதம் எழுதியதும் ஒரு காரணமாகும்.
உள்துறை அமைச்சர் தமது ஆதரவு கடிதத்துடன் அம்னோ முதன்மை வழக்குரைஞர்களையும் அழைத்துக்கொண்டு அமெரிக்கா செல்ல வேண்டியதுதானே!!!! நம் நாட்டின் பாதுகாப்புக்காக பேருதவி செய்த சூதாட்ட மன்னன் பௌல் புவாவை கைவிடலாமா ஜாஹிட்????