போலீஸ் இன்று பிற்பகல் நடக்கும் கித்தா லவான் பேரணியின்போது தன் கடமையைச் சரியாகச் செய்து பேரணி அமைதியாக நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என பெர்சே நினைவுறுத்தியுள்ளது. பேரணியில் குழப்பம் ஏற்பட்டால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
“பேரணி அமைதியாக நடைபெற உதவ வேண்டுமென பெர்சே போலீஸ் படைத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறது. பேரணியில் கலந்துகொள்வோரிடம் பகை பாராட்ட வேண்டாம் அவர்களுக்கு வெறுப்பூட்ட வேண்டாம்.
“அமைதியாக ஒன்றுகூட மக்களுக்குள்ள அரசமைப்பு உரிமையை நிலைநாட்ட போலீஸ் உதவ வேண்டும்”, என பெர்சே ஓர் அறிக்கையில் கூறியது.
குழப்பம் செய்வது தானே போலிசாரின் வேலை!