இன்று கோலாலும்பூரில் நடைபெறவுள்ள பேரணியை சட்டவிரோத பேரணி என்று போலீஸ் அறிவித்துள்ளது.
சோகோ விற்பனை மையத்துக்கு வெளியில் நடைபெறும் கித்தா லவான் பேரணி எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து நடத்தப்படுகிறது.
இப்பேரணிக்குப் பக்கத்தான் ரக்யாட் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை.
அதில் கலந்துகொள்லுமாறு பாஸ் அதன் ஆதரவாளர்களுக்கு எந்த உத்தரவும் இடவில்லை. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கும் மாநிலப் பிரதிநிதிகளுக்கு மாநிலத்தில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் இருக்கும் அவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பேரணியைப் பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் 30.000 பேர் வரை திரளலாம். ஆனால் உண்மை (அற்ற) செய்தியை தெரிந்துகொள்ள வானொலி 6 மற்றும் டி.வி.2 தமிழ் செய்திகளை அணுகுங்கள். யாருமே வரவில்லை. கூட்டம் பிசுபிசுத்து விட்டது என்று ‘சேதி’ சொல்வார்கள்.
அமைதி பேரணிக்கு நல்ல வரவேற்ப்பு போல் தெரிகிறது….
பேரணியில்10.000க்கு மேற்ப்பட்டவர்களும் பக்காத்தான் தலைவர்களும் கலந்து வெற்றி பெற. செயிதுள்ளார்கள்!