அன்வாரை விடுவிக்கக் கோரி 10,000 க்குமேற்பட்டோர் கேஎல்சிசியில் திரண்டனர்

 

kitalawan13எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமை விடுவிக்கக் கோரி கித்தா லவான் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்த பேரணி சோகா வாணிக மையத்திலிருந்து புறப்பட்டு எவ்விதத் தங்குதடையுமின்றி கேஎல்சிசியை சென்றடைந்தது.

கேஎல்சிசியில் 10,000 க்கு மேற்பட்டோர் திரண்டிருந்தனர். சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட வேண்டும், நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மிகுந்த உற்சாகத்துடனும் அமைதியாகவும் நடைபெற்ற கித்தா லவான் பேரணி நள்ளிரவு வரையில் தொடர வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால், மாலை மணி 6.07 அளவில் இப்பேரணி அதிகாரப்பூர்வமாக முடிவுற்றதாக என்ஜிஓ 13 இன் தலைவர் பாரிஸ் மூசா அறிவித்தார்.kitalawan12

கேஎல்சிசியில் தொடர்ந்து இருக்க யாரேனும் விரும்பினால் அவர்கள் இருக்கலாம். அவர்கள் இங்கு மெழுகுவர்த்தி விழிப்பு நிலையை அனுசரிக்க மெழுகுவர்த்தியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவ்ர் தெரிவித்தார்.

இக்கட்டம் வரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

இப்பேரணியின் இறுதிப் பேச்சாளர் பிகேஆர் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸூரைடா கமாருடின். ஏற்பாட்டாளர்கள் இன்று ஒரு வெற்றிகரமான நாள் என்று கூறினார்.