மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானம் காணாமல்போய் ஓராண்டு ஆகும் வேளையில் அந்தத் துயரச் சம்பவத்தில் காணமல்போனவர்களை நினைவுகூர்வதிலும் கெளரவிப்பதிலும் மலேசியர்கள் ஒன்றுபட்டு நிற்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
விமானத்தைத் தேடும்பணி தொடர்வதாகவும் அப்பணியில் மலேசியா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறிய நஜிப், எம்எச்370 கண்டுபிடிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
“இன்று நாம், மலேசியர் 50 பேர் உள்பட எம்எச்370-இல் பயணித்த 239 பேரையும் நினைவுகூர்வதிலும் கெளரவிப்பதிலும் ஒன்றுபட்டு நிற்கிறோம். அவர்களுக்காகவும் அவர்களின் பிரியமானவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். அவர்களின் சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்”, என நஜிப் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கொலைகார பாவிகளா !!!
239 உயிர்களை உங்களுடைய மெத்தனத்தால் கொன்று விட்டு
யார் காதுல பூ சுற்றுகிறீர்கள் ?
இந்த மூன்று மூதேவிகளின் “ஓராண்டு மடத்தனத்தை” கொண்டாடும் வகையில் மலேசிய மக்கள் MH 370 வடிவிலான கேக் வெட்டி நினைவுகூர்வீர்களாக