குலா: கொரோனர் தீர்ப்புகள் லாக்-அப் மரணங்களுக்கு முடிவைக் கொண்டுவர வேண்டும்

kulaபோலீஸ் காவலில் நிகழ்ந்த  இரண்டு  மரணங்களுக்கு  போலீசாரே  பொறுப்பு  என  மரண  விசாரணை  அதிகாரிகள்  அளித்துள்ள  தீர்ப்புகளைத்  தொடர்ந்து  அப்படிப்பட்ட  மரணங்களுக்கு  அரசாங்கம்  ஒரு  முடிவுகட்டும்  நிலை  வருமா  என  ஈப்போ பாராட் டிஏபி  எம்பி எம்.குலசேகரன்  வினவுகிறார்.

இரண்டாண்டுகளுக்குமுன்  லாரி  ஓட்டுநரான  சந்திரன்  போலீஸ்  லாக்-அப்பில்  இறந்ததற்கு  போலீசின்  கவனக்  குறைவே  காரணம்  என  கொரோனர்  நீதிமன்றம்  ஜனவரி  16-இல்  தீர்ப்பளித்திருந்தது.

மார்ச் 6-இல்,  கொரோனர்  ரோஸி  பைனுன்,  2013-இல்  காஜாங்கில்  நிகழ்ந்த  சுகுமாரின்  இறப்புக்கும்  போலீசின்  கவனக்குறைவிதான்  காரணம்  என்று  தீர்ப்பளித்திருந்தார்.

இருதய  நோயாளியான  சந்திரனுக்கு  போலீஸ் மருத்துவ  சிகிச்சை  அளிக்கத்  தவறினார்கள்  என்பது  அதிர்ச்சியளிக்கிறது  என  குலசேகரன்  குறிப்பிட்டார்.

“சந்திரன், சுகுமார்  ஆகியோரின்  இறப்புகள்  போலீசின்  மனசாட்சியை  உறுத்தவில்லை  என்றால்  வேறு  எதுதான்  அவர்களின் மனசாட்சிக்கு  உறுத்தலாக  இருக்கும்  என்பது  எனக்குத்  தெரியவில்லை”, என்றாரவர்.