தற்போது மலேசியாவில், ஏன் உலகளவில் கூட, பெருமளவில் பேசப்பட்டு வரும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் (1எம்டிபி) குறித்து பிரதமர் நஜிப் ரசாக் அம்னோவின் 160 தொகுதி தலைவர்களுக்கு அளித்த விளக்கத்தில் அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர் என்று பேராளர்கள் கூறினர்.
இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் பிரதமர் 1எம்டிபி பற்றி நீண்ட விளக்கம் அளித்ததாக கூறிய பேராளர்கள், இறுதியில் 1எம்டிபி நாட்டிற்கு நன்மையைக் கொண்டு வரும் என்று நம்புவதாகக் கூறினர்.
சமீத்தில் வெளியான அறிக்கைகளில் 1எம்டிபி நிதி நிலைமை மோசமாகிக் கொண்டிக்கிறது; அது இழுத்து மூட வேண்டிய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு எதிர்மாரானதாக அம்னோ தொகுதித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் இருக்கின்றன.
“பிரதமர் எதையும் மறைக்கவில்லை, அரசாங்கம் எதையும் மூடிமறைக்க முயலவில்லை”, என்று அவர்களில் ஒருவரான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் கூறினார்.
1எம்டிபி மீது ஒரு சுயேட்சை கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் அது நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவிடம் (பிஎசி) சமர்பிக்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்ததை இஸ்மாயில் சாப்ரி குறிப்பிட்டார்.
” (அம்னோ) தலைவர் நிலைமையை விளக்கினார். அனைத்துத் தொகுதித் தலைவர்களும் விளக்கத்தால் திருப்தி அடைந்துள்ளனர்”, என்றாரவர்.
தொகுதி
தொகுதி தலைவர்ககுக்கு திருப்தி படும்மளவுக்கு கிடைத்திருககும் pola நடப்பு பிரச்சனைகளை அறிந்தும் அறியாதவர்கள் !
‘இறுதியில் நாட்டிற்கு நன்மையைக் கொண்டு வரும்.” அந்த இறுதி இறுதியாக எப்போது வரும்! இன்னொரு 50 ஆண்டுகள்?
இந்த விளக்க கூட்டத்திற்கு பதிலாக, “அம்னோ தலைவர் ஊமையாகவும், தொகுதி தலைவர்கள் செவிடர்களாகவும்” இருந்திருக்கலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத சில அம்னோ தொகுதி தலைவர்கள் விளக்க கூட்டத்திற்கு பிறகு புத்ரா உலக வாணிப வளாகத்தில் தெரிவித்ததை நாளிதழ்கள் வெளியிடக்கூடாது சில அம்னோ தொகுதி தலைவர்கள் மிரட்டியதாக ஒரு செய்தி.
தொகுதி தலைவர்கள் திருப்தி அடைவது முக்கியமில்லை. இந்த நாட்டு மக்கள் திருப்தி அடைய வேண்டும்….
கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டால் திருப்திதானே.மக்கள் உழைப்பில்( வரியில் ) வாழ்க்கை நடத்தும் இவர்கள் அம்னோ ஆதிக்கம் இருக்கும் வரையில் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள்.